இந்திய ரயில்வே துறையில் லோகோ பைலட் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் loco pilot qualification in tamil

ரயில்  பயணங்கள் அதன் நடைமுறைகள், டிக்கெட் வாங்குவது, கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வாங்குவது, ரயில் பெட்டிகள் எப்படி வரிசைப்படுத்தி சேர்க்கப்படுகிறது என்பது போன்ற விஷயங்களை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த ரயிலை ஓட்டுபவர் யார்?  இவ்வளவு பெரிய ரயிலை ஒருவர் தனியாக ஓட்டுவாரா? எவ்வளவு நேரம் ஓட்டுவார், முழு பாதைக்கும் ஒருவரே ஓட்டுவாரா ? அவரது சம்பளம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? மற்ற துறை பணிகளை பற்றி அதிகம் கேட்டிருப்போம். ஆனால் ரயில் சார்ந்த பணிகள் பற்றி அதிகம் தெரியாது. இப்போது தெரிந்துகொள்வோம்.

இந்தியர்களைப் பொறுத்தவரை, ரயில்வே பயணத்திற்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவம். ரயில் பயணத்தில் பெரும்பாலானவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும்.

பல கனவுகளோடு செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கொண்டு போகும் ரயிலின் ஓட்டுனர் ” லோகோ பைலட்” என்று அழைக்கப்படுகிறார். ஒரு விமானி விமானத்தை ஓட்டுவது போன்றது இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் வேலை.  மக்களை அவர்களது இடங்களுக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாமல், சரக்கு ரயில்களில் பொருட்களையும் கொண்டு செல்கிறார்கள்.

loco pilot qualification in tamil
loco pilot qualification in tamil

லோகோ பைலட் யார்?

லோகோ பைலட் என்பவர் ரயில்களை ஓட்டுபவர். ரயிலின் இயக்கத்தை திறம்பட மேற்பார்வையிட ஒரு நபர் தேவை. இது இந்திய ரயில்வேயில் ஒரு உயர் பதவி. ஆனால் எந்த ஒரு நபரும் நேரடியாக லோகோ பைலட்டாக நியமிக்கப்பட மாட்டார்கள். இந்திய ரயில்வே முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்களை நியமிக்கிறார்கள். இதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக சேரும் நபர் அனுபவம் பெற்ற பின்னர் பதவி உயர்வு மூலம் லோகோ பைலட்டாக மாறலாம்.

லோகோ பைலட்டின் கடமைகள்

அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டின் கடமைகள், லோகோ பைலட்டுக்கு ரயிலை சீராக இயக்க உதவுவதாகும். ஒரு லோகோ பைலட்டின் பணி, ரயில் இன்ஜினை முறையாகப் பராமரித்தல், ரயிலில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அவற்றை சரிசெய்தல், சிக்னல் மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது. அதற்கு ஏற்ப ரயில்களை இயக்குவது.

loco pilot qualification in tamil லோகோ பைலட் ஆவது எப்படி?

இதற்காக தனியே  ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (railway recruitment board) தேர்வுகளை நடத்தும். குறிப்பிட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் குறைந்தபட்ச கல்வித்தகுதி.  உதவி லோகோ பைலட் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலைகளிலும் கணினி அடிப்படையிலான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் லோகோ பைலட் ஆகலாம்.

லோகோ பைலட்டின் சம்பளம்

லோகோ பைலட் பதவிக்கான சம்பளம்  ஊதிய நிலை 2 (Level 2 Pay Matrix) ஆகும். தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக இருக்கும். இதனுடன், வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படி, போக்குவரத்து கொடுப்பனவு போன்ற சலுகைகள் உள்ளன.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!