குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் தேனீ வளர்ப்பு திட்டம்
Honey beekeeping business new ideas 3 tips
Join our Groups | |
Click here |
புதிதாக சிறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான தொழில் வாய்ப்பு. அதாவது தேனீ வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் பல ஆரோக்கியமான பிரச்சனைகளுக்கு தேன் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. இத்தகைய தேனீ வளர்ப்பு மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறலாம்.
“பலரும் தேனை ஒரு உணவுப் பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். அது, ஒரு மருந்துப் பொருளும்கூட. ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்தால், தங்கள் குடும்பத்துக்குத் தேவையான தேனை அவர்களாகவே தயாரித்துக்கொள்ள முடியும்.
தேனீ வளர்ப்பில்
தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமே கிடைப்பதில்லை. தேன் மெழுகு, அரச உணவு எனப்படும் ‘ராயல் ஜெல்லி’ ஆகியவையும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, தேனீயைக் கொட்ட வைத்து மூட்டுவலி நீக்குவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உயிரினப் பன்மையை வளர்ப்பது போன்ற மற்ற பயன்களையும் தேனீக்கள் தருகின்றன இப்படிப் பல பயன்களைக் கொண்ட தேனீ வளர்ப்புக்கு உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பாசன வசதி என எதுவுமே தேவையில்லை. பெட்டிகள் மட்டும் இருந்தால் போதும். தேனீக்கள் தானாகத் தேடி வரும்”
மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகிய ஐந்து வகைத் தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. எனினும், இவற்றில் இந்தியத் தேனீ மட்டுமே தேனீ வளர்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.
தேனீ வளர்ப்பு… செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
செய்ய வேண்டியவை.
- தேனீ பெட்டிகளை நிழல் அதிகமுள்ள இடத்தில் வைக்க வேண்டும்
- மலர்கள் அதிகமாக உள்ள இடத்தில் பெட்டியை வைக்க வேண்டும்
- வாரத்துக்கு ஒரு நாள் திறந்து பார்த்தால் போதும்
- தேனீ வளர்ப்புப் பெட்டியின் அடிப்பாகத்தில் மெழுகு இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும்
- தேனீ பெட்டியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இரவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்
-
பெட்டியைத் திறந்து பார்க்கும்போது, பக்கவாட்டிலிருந்துதான் திறக்க வேண்டும். இல்லையென்றால், தேனீ கொட்டிவிடும் சாத்தியம் உண்டு
- வண்ணத்துப்பூச்சிகள், தேனீப் பெட்டியில் முட்டையிட்டுச் செல்லும் சாத்தியம் உள்ளது. அவ்வாறு முட்டையிட்டால், அது தேனீப் பெட்டியைப் பயனற்றதாக மாற்றிவிடும். தேனீக்கள் எல்லாம் வெளியேறிவிடும். எனவே, வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டிருந்தால், அதை தேங்காய் நார் கொண்டு தேய்த்து அகற்றிவிடலாம்.
செய்யக் கூடாதவை…
- நமது வாசனையைத் தேனீக்கள் நினைவில் வைத்திருக்கும். எனவே, தேனீப் பெட்டிக்கு அருகில் செல்லும்போது, உடலில் வாசனைத் திரவியங்களின் நெடி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், தேனீ கொட்டிவிடும்
- புகைப்பிடித்துவிட்டு, மது அருந்திவிட்டு தேனீப் பெட்டிக்கு அருகில் செல்லக் கூடாது
- நீர் தேங்கும் இடத்தில் தேனீப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல எறும்பு அதிகமுள்ள இடத்திலும் வைக்கக் கூடாது.
- தேனீப் பெட்டியை அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது. அதேபோல அடிக்கடி தேனீப் பெட்டியின் இடத்தையும் மாற்றக் கூடாது

தேனீ வளர்ப்புப் பெட்டிகள்
இந்தியத் தேனீக்கள் 7 சட்டங்கள் கொண்ட நியூட்டன் பெட்டியிலும், 8 சட்டங்கள் கொண்ட இந்திய தரக்கட்டுப்பாட்டுப் பெட்டியிலும் வளர்க்கப்படுகின்றன. இத்தாலியத் தேனீக்கள் 10 சட்டங்கள் கொண்ட லாங்ஸ்ட்ராத் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.
பயிற்சி
தேனீ வளர்ப்பிற்கு சில அரசு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. தேனீ வளர்ப்பதற்கு ஒரு நாள் பயிற்சியே போதுமானது. இதன் தொழில்நுட்பங்கள், விற்பனை போன்றவற்றிற்கு சிறிது கூடுதல் காலம் தேவைப்படும்.
தேனீ வளர்ப்புக்கு ஏற்ற இடங்கள்
தேனீ வளர்ப்புக்கு போக்குவரத்து அதிகமில்லாத இடமாக இருத்தல் நல்லது. பள்ளி,கல்லூரி மற்றும் அதிகக் கூட்டம் கூடும் இடங்கள் புகை மிகுதியாக வரும் இடம் மருந்துப் பொருட்களின் வாசனை உள்ள இடங்கள்
போன்றவை ஏற்றதல்ல. இவை இல்லாத நிழலான இடங்களில் வளர்க்கலாம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை எறும்பு, பூச்சிகள் ஏறாத இடங்களாக சிறிது உயரத்தில் வைக்க வேண்டும்.
தேனீ வளர்ப்பிற்கான மாதிரி திட்ட அறிக்கை
தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது.
முதலீடு
தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2000 வீதம் = 20,000
1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000
முதலீட்டுச் செலவு = 22,000
வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 20 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 200 கிலோ கிடைக்கும்.
விற்பனை 200 கிலோ X 100 ரூபாய் = 20,000
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும்.
விற்பனை 20 கிலோ X 100 ரூபாய் = 2,000
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்
1 காலனிக்கு ரூபாய் 500 வீதம் 10 X 4 X 500 = 20,000
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
நிகர வருமானம்
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
முதலீட்டுச் செலவு = 22,000
முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 20,000
Join our Groups | |
Click here |